எனது நூல்களில் கொமோரா எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமானது. சொல்லப்போனால் நான் எழுத நினைத்த முதல் நாவல். ஆனால் நினைத்த மாதிரி அதனை எழுதமுடியவில்லை. மூன்று நாவல்கள் நான்கு சிறுகதைத் தொகுப்புகளென ஏழு நூல்கள் எழுதிய பின்புதான் அந்தக் கதையை நிதானமாக அணுகுவதற்கான மனநிலையை அடைய முடிந்தது. அதனாலேயே புத்தக வெளியீடுகளில் பொதுவாக ஆர்வம் காட்டாத நான் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டை மட்டும் சிறப்பான முறையில் நடத்த விரும்பிச் செய்தேன். தோழர்கள் திருமுருகன் காந்தி, சல்மா, நெல்சன் சேவியர், கவிதைக்காரன் இளங்கோ என முக்கியமானவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் நெல்சன் சேவியரின் உரை.
https://www.youtube.com/watch?v=DBMC6PYQGLc